வெள்ளி, 24 மார்ச், 2017

ஆரோக்கிய உணவு கேப்பைக் கூழ் ..!!

ஆரோக்கிய உணவு  கேப்பைக் கூழ் ..!!


ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இதனை கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது.
மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய சிறு தானியங்களில் அற்புதமான சத்துக்கள் மறைந்துள்ளன. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும்.
இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை. இவை சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்கிறது.
இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன.
மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை.


ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது ராகி. சிறு தானிய வகையைச் சேர்ந்த இது கேப்பை மற்றும் கேழ்வரகு என்றும் அழைக்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது.
இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது.
இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு. உடலுக்கு வலிமை தரும் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பி கரேட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.
எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் உடலுழைப்பாளிகளாகவும் திடகாத்திரமானவர்களாகவும், திகழ்ந்து வந்துள்ளனர். கேப்பையை கூழாக சாப்பிடுவதை விட ரொட்டி போல செய்து சாப்பிடலாம்.
ஏனெனில் கூழாக உண்ணும் போது சீக்கிரம் ஜீரணம் ஆயிடும். மீண்டும் பசி எடுக்கும் எனவே ரொட்டி ஜீரணம் ஆக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் பசி குறைவா எடுக்கும். உஷ்ணத்தை குறைக்கும் ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும். இன்றைக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் களி செய்து உண்கின்றனர்.
இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.
இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. ராகி மால்ட் செய்தும் சாப்பிடலாம்.

காரமான வரமிளகாய் துவையல் ....!!

காரமான வரமிளகாய் துவையல் ....!!


தேவையான பொருட்கள் :


வரமிளகாய் - 10
பெரிய வெங்காயம் – 1
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 1 பல்
தக்காளி – 2
பெருங்காயம் – 1 துண்டு
உப்பு – அரை டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 இணுக்கு
செய்முறை :
* பெரிய வெங்காயம் சின்னவெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும் 
* தக்காளியைத் துண்டுகளாக நறுக்கவும். 
* மிக்ஸியில் வரமிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் பூண்டு, தக்காளி, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.
* கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டிக் கலந்து பரிமாறவும்.
* சுவையான வரமிளகாய்த் துவையல் ரெடி.
* இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும்

வியாழன், 23 மார்ச், 2017

பயன்கள் நிறைந்த பாகற்காய்..

பாகற்காய்... அள்ளித்தரும் ஆரோக்கியப் பலன்கள்!


பாகற்காய்-Bitter guard 


பாகற்காய்... இந்தப் பெயரைச் சொன்னவுடன் பலருக்குக் குமட்டல் வந்துவிடும். சிலர் வாய் முழுக்க அதன் கசப்பு படர்ந்துவிட்டதுபோல உணர்வார்கள். பெரியவர்களுக்கே இப்படியென்றால், குழந்தைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். `உவ்வே...’ காட்டி ஓடுகிற செல்லங்களே அதிகம். பாகற்காய் சமைக்கிற தினத்தில் அவர்களைச் சாப்பிடவைக்க, ஓடிப்பிடித்து விளையாட வேண்டியிருக்கும். ஆனால், பாகற்காய் அந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கவேண்டிய காய் அல்ல. நமக்கு நன்மை தரும் பல அம்சங்கள் இதில் உள்ளன. அவை இங்கே...

பாகற்காய்

இரண்டு மடங்கு வலிமை!

புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் இதில் உண்டு. இந்த பீட்டா கரோட்டின்தான், நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு சேகரமாகும்.  இது நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது. பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இதில் உண்டு. இது நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். வாழைப்பழத்தில் உள்ளதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்குப் பொட்டாசியம் உதவும். 

இன்சுலின் சுரப்பு மேம்படும்!
இதில் சாரன்டின் (Charantin) என்ற வேதிப்பொருள் உள்ளது.  ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை இது குறைக்கும். இதேபோல் பாலிபெப்டைடு பி ( Polypeptide P) என்ற இன்சுலின் பாகற்காயில் உள்ளது. இது சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவும்.

வைட்டமின் கலவை


vitamin

வைட்டமின்

இது கலோரி குறைவான ஓர் உணவு. இதில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் (Folate), சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.

குடற்புழுவுக்கு மருந்து
இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கிக் குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும். 

விதைகளிலும் உண்டு பயன்கள்!

இதன் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும். புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு  உண்டு. 

தோல் நோய்களுக்கு மருந்து!

fair skin
இதன் சாற்றை எலுமிச்சைச் சாற்றில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்னை நீங்கும். தோல் பிரச்னைகளான சிரங்கு, அரிப்பு, ரியாஸிஸ், படர்தாமரை, அலர்ஜி போன்றவற்றுக்குத் தீர்வு தரும். 

முடியைப் பாதுகாக்கும்!

இதன் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும். இதன் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடிகொட்டுவது குறையும்.  

எடை குறைப்புக்கு உதவும்!
பாகற்காயில் 80- 85% தண்ணீர் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் கலோரியும் குறைவுதான். தண்ணீர் நமது பசியைக் போக்கும் என்பது நமக்குத் தெரியும். பாகற்காயைச் சாப்பிடுவதால் பசி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதனால் எடை குறையும். 

சுவாசப் பிரச்னைகளை நீக்கும்!
துளசி இலை, பாகற்காய் இலை இரண்டையும் ஒன்றாக்கி அரைத்து தேனில் கலந்து தினமும் காலையில் சாப்பிடவேண்டும். இது ஆஸ்துமா, சளி, இருமலுக்கு நல்ல தீர்வாக அமையும். 

கல்லீரலுக்கு நல்லது!

பாகற்காய் ஜூஸ்

பாகற்காய் ஜூஸ்
பாகற்காய் அல்லது பாகற்காய் இலையைப் போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் குடித்தால், அது தொற்றுகளைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.

மலச்சிக்கலுக்கு மருந்து!
இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.  இதனால் மலச்சிக்கல் , அஜீரணம் போன்றவற்றை நீக்கும். வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் முடிவு கட்டும். 

ஓர் எச்சரிக்கை!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பாகற்காயைப் பொறுத்தவரை உண்மை.  தினமும் பாகற்காயைக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அடிவயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டி வரும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகுதான் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பாகற்காயைத் தவிர்ப்பது நல்லது. 
கசப்பான விஷயங்கள் எப்போதும் நம்மை பாதிப்பவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.  அவை சில நேரம் இனிப்பைவிட அதிகப் பலன்களைக் கொடுப்பவை. அதனால் குறைவான அளவில் உணவிலும் வாழ்விலும் கசப்பான விஷயங்கள் தேவை. அந்தப் பட்டியலில் முதல் இடம் பாகற்காய்க்கே! இது அள்ளித் தரும் பலன்களும் அதிகம்... கவனத்தில் கொள்ளவும்!

பாகற்காயை நம் உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வோம்..



references- http://food.ndtv.com/food-drinks/7-health-benefits-of-bitter-gourd-karela-juice-1423896



Comments System

Disqus Shortname